நீ அடித்த ரன்களை விட உன்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்தது.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்

அந்த வகையில் விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி மயங்க் அகர்வால் பற்றி கூறியுள்ளார், நான் உன்னை முன்பே ராயல் சேலஜ் பெங்களூர் அணியில் விளையாடிய போதே பார்த்திருக்கிறேன். மேலும் அப்போதே நீ சர்வதேச பந்து வீச்சாளர்களை எதிர்த்து கொஞ்சமும் பயப்படாமல் துணிச்சலாக ஆடினாய் அது எனக்கு மிகவும் உன்னிடம் எனக்கு பிடித்தது.

ஒவ்வொரு போட்டியை சூழ்நிலையையும் ஒரு வீரர் எப்படி அனுகுகிறார் என்பதே முக்கியம், முதல் தரப் போட்டிகளில் நீ தொடர்ச்சியாக நீ அடித்த ரன்களை விட உன்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்தது. உன்னுடைய பயமற்ற துணிச்சலான ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று புகழ்ந்துள்ளார்.

தோனி தான் சிறந்த கேப்டன் சாகித் அப்ரிடி.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சாகித் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் செய்த சாதனைகளை பற்றி சொல்லியே தெரியவேண்டாம் , மேலும் 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்டதற்கு சாகித் அப்ரிடி கூறியது என்னைப்பொறுத்த வரை தோனி தான் சிறந்த கேப்டன் ஏனென்றால் இளம் வீரர்களை புரிந்து கொண்டு பொறுமையாக தனது கருத்துக்களை வழங்கி வழிநடத்துவார். ஆனால் அந்த விஷயத்தில் ஸ்டிவ்காக் தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார் மேலும் அந்த அணியை தான் பாண்டிக்கு வழிநடத்தினார்.. இதனால் தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.

மரத்தின் மேல் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் விராட் கோலி.!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதனால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த . மேலும் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலே தனது புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரத்தின் மேல் நின்று கொண்டு ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் மேலும் மரத்தில் ஏறி இயற்கையை என்ஜாய் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அழகான அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகமான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அளித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Throwback to when you could just climb up a tree and chill 🤙😃

A post shared by Virat Kohli (@virat.kohli) on

அடுத்த தோனி யார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவரிடம் அடுத்த தோனி யார் என்று கேட்ட கேள்விக்கு தற்பொழுது  பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி யார் என்று கேட்டால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் அணியை தோனி போல் பொறுமையாக இருந்து மீட்டெடுப்பர், மேலும் பவுலர்களுக்கு சிறப்பான அறிவுரைகளை கூறுவார்.

மேலும் சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

தோனி குறித்து தினேஷ் கார்த்திக் என்ன கூறினார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார்.

கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது கோபத்தை வீரர்களிடம் காட்டமாட்டார் என்பதே.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார், அதில் தோனி எனக்கு மிகவும் பிடித்த வீரர், எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அணையில் உள்ள கிரிக்கெட் விரர்களை மிகவும் பொறுமையான முறையில் வழிநடத்துவார்.

மேலும் கிரிக்கெட் மைதானத்தில் யாரேனும் ஒரு கிரிக்கெட் வீரர் தவறு செய்தால் அதை பொறுமையாக சென்று கருத்துக்களை வழங்குவார், மேலும் நான் அவருடன் விளையாடிய போது அவருடைய குணத்தை பார்த்து வியந்து போனேன். அவருடைய பேட்டிங் மற்றும் கீப்பிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ரிக்கி பாண்டிங்கிற்கு பிடித்த பெஸ்ட் 3 ஃபீல்டர்கள் யார் யார் தெரியுமா.?

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் திறமையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அதை போல் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறந்து ஒரு கிரிக்கெட் வீரர். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர், ஆல்டைம் உங்களுக்கு பிடித்த 3 பெஸ்ட் ஃபீல்டர்களை யார் என்று கேட்டதற்கு பாண்டிங் கூறிய பதில் முதலில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அவர் பந்தை முழுவதுமாக கவனித்து சிறப்பாக செயல்படுவார் எபி டிவில்லியர்ஸ் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் பந்தை ஒரு பொழுதும் விடவே மாட்டார் சிறப்பாக பீல்டிங் செய்யவர்.

அடுத்ததாக ஜாண்டி ரோட்ஸ் தலைசிறந்த ஃபீல்டர் அவர். ஃபீல்டிங்கின் அடையாளமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர், என்றும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்

விராட் கோலி கேப்டன்ஷி ரிக்கி பாண்டிங் போல் உள்ளது.!

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரட் லீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலி கேப்டன்ஷி பற்றி கூறியுள்ளார், அதில் கூறிய ஆவர் விராட் கோலி பேட்டிங் சிறப்பாக இருக்கும், மேலும் அவருடைய கேப்டன்ஷி எனக்கு மிகவும் பிடித்துள்ளது, சொல்லப்போனால் அவருடைய கேப்டன்ஷி ரிக்கி பாண்டிங் கேப்டன்ஷி போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

விளையாட்டை நீ விரும்பினால் ஆடு இல்லை என்றால் ஒதுங்கி விடு.!

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கிட்ட தட்ட 17 வருடங்கள் தொடர்ந்து விளையாடி பல கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார், கடந்த 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50வது உலக கோப்பை என இரண்டு கோப்பையை வெல்வதற்கு இவர் மிகப் பெரும் காரணமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மேலும் அவர் கிரிக்கெட் விட்டு விலகினாலும் அவர் அடித்த 6 பந்துகளில் 6 சிக்ஸர் ரசிகர்கள் மனதில் அளிக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது, இந்நிலையில் யுவராஜ் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

புற்று நோய்க்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சரியாக விளையாட முடியவில்லை, அவர் அப்பொழுதே கிரிக்கெட் விட்டு விலகிவிடலாம் என்று யோசனை செய்துள்ளார், அப்பொழுது இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங்கிடம் கூறியது “நாம் அனைவரும் எதற்க்காக கிரிக்கெட் விளையாடுகிறோம் தெரியுமா..? உனக்கு கிரிக்கெட் விளையாட விருப்பம் இருந்தால் விளையாடு இல்லையென்றால் ஓய்வு பெற்று விடு என்று கூறியுள்ளார்.

கிங் கோலியின் அடுத்த வெறித்தனமான சாதனை.!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்கள் அவரது பேட்டிங்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளார்கள் மேலும் தற்பொழுது கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி தனது சமூக வலைத்தளத்தில் தான் எடுக்கும் புகைபடங்களை பதிவு செய்து உற்சாக படுத்தி வருகிறார், மேலும் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் எந்த கிரிக்கெட் வீரர்களும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

விராட் கோலி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் 70.7 மில்லியன் மக்கள் அவரை பின் தொடருகிறார்கள், மேலும் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் விராட் கோலி போன்று பின்தொடர்வோர்கள் இல்லை.

தோனிக்கு நல்ல உடல் தகுதியும், திறனும் இருந்தால் தொடர்ந்து விளையாட முடியும்.!

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இந்நிலையில் மேலும் அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறினார்.

வருகின்ற செப்டம்பர் 19- ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்தது இது ரசிகர்களின் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

மேலும் ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளார்கள் என்றே கூறலாம், தோனி கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. அந்தப் போட்டிதான் தோனி கடைசியாக விளையாடிய கிரிக்கெட் போட்டியாகும். மேலும் இந்த நிலையில் தற்பொழுது சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியை பற்றி சிறப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறியது தோனிக்கு நல்ல உடல் தகுதியும், திறனும் இருந்தால் தொடர்ந்து விளையாட முடியும் . யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது. மேலும் அதைபோல் வயதை காரணம் காட்டி எந்த ஒரு வீரரை ஓரம் தள்ளி விடக் கூடாது.

தோனி ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவாகும். இந்த வருட ஐபிஎல் தொடர் அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.