உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதனால் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல் என அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் ரசிகர்கள் இருந்தாலும் இல்லைனாலும் கிரிக்கெட் நடத்த வேண்டும் என்றார். ரசிகர்கள் இல்லைனாலும் நேரடி ஒளிபரப்பு மூலம் அதிக ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *