கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னர் அளித்த பேட்டியில் தோனி  மிகவும் அமைதியானவர் என்றார். ஆனால் 2019 ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது கடைசி ஓவரில் நடுவர்கள் நோபால் தர மறுத்ததால் கோபமடைந்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரைப் போலவே நானும் அதிர்ச்சி அடைந்தேன். போட்டி முடிவடைந்த பிறகு தோனியை நடுவர்களுடன் பார்த்தேன். அப்போது தோனி இவ்வாறு நடத்துக் கொண்டதற்கு நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்று சான்ட்னர் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *