மேக்ஸ்வெல் திடீர் ஓய்வு ஏன்? உண்மையை உடைத்த பயிற்சியாளர்!

மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் தனது மனநலப் பிரச்னையை சரிசெய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேக்ஸ்வெல்லின் இந்த முடிவை அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெல் அவரது கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாட முடியவில்லை. அடிலெய்டில் சிறப்பாக விளையாடினார். அட்டகாசமாக ஃபீல்டிங் செய்தார். எனினும் அவர் அதை ரசித்து செய்தார் என நான் […]

உடல்நிலை சரியில்லை… இருந்தாலும் ரசிகர்களை மகிழ்வித்த ஜோகோவிச்!!

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செர்பிய வீரரான ஜோகோவிச் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் பிரெஞ்ச் வீரா் கோரென்டின் மொடேட்டை வென்றார். உடல் நலன் சரியில்லாத போதும், ரசிகர்களுக்காக களமிறங்கிய ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு ஆட்டத்தில் நம்பா் ஒன் வீரா் நடால், 7-5, 6-4 என்ற நோ் செட்களில் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு […]

பகலிரவு டெஸ்டுக்கு.. பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல்.. அட இத்தனை பேரா? கங்குலி வெளியிட்ட லிஸ்ட்!

இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் பிசிசிஐ பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போட்டிக்கு இருநாட்டுப் பிரதமர்களுக்கும் பிசிசிஐ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் பதில் இதுவரை வெளிவரவில்லை. மேலும், வீராங்கனைகள் மேரி கோம், பிவி சிந்து, கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு […]

வந்தவுடன்.. ரவி சாஸ்திரிக்கு முதல் வேலையை வைத்த கங்குலி!

பிசிசிஐ தலைமையில், பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகடெமி இயங்கி வருகிறது. இதன் தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்து வருகிறார். புதிதாக பிசிசிஐ தலைவர் பொறுப்பேற்றுள்ள கங்குலி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்க்காக அண்மையில் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் இளம் வீரர்கள் ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டத்தின் முதிர்ச்சியை பெற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, அவரது பதவிக் […]

இதுலயே தங்கம் ஜெயிச்சுட்டாங்க.. அப்போ கண்டிப்பா ஒலிம்பிக்ல நமக்கு தங்கம் இருக்கு..!

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளன. இதற்கான சோதனை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குத்து சண்டை போட்டிக்கான ஒலிம்பிக் சோதனை போட்டிகள் நடைபெற்றது. அதில் 63 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான சிவா தபா, கஜகஸ்தான் நாட்டின் பிரபல வீரரான சனடாலி தொல்டாயேவ் என்பவரை எதிர்கொண்டார். இதில் தபா 5-0 என்ற புள்ளி கணக்கில் சனடாலியை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வென்றார். இவர் ஆசிய போட்டியில் […]

கத்துக்குட்டி ஓடிசாவிடம் மும்பை பரிதாப தோல்வி!

ஐ.எஸ்.எல் தொடரின் இன்றைய லீக் ஆட்டம் மும்பை சிட்டி எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்றது. போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஒடிசா வீரர்கள் அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை திணறடித்தனர். இதனால் முதல் பாதியின் முடிவில் ஒடிசா அணி 3-0 என பலமான முன்னிலையை பெற்றது. இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் சற்று ஆறுதல் தரும் விதமாக கோல் அடித்தனர். ஆனால், மும்பை சிட்டி அணி ஓடிசாவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க […]

அதெல்லாம் முடியாது.. போட்டி இந்த மைதானத்தில் தான் நடக்கும் – கங்குலி திட்டவட்டம்!

இந்தியா வங்கதேச அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரின் முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இப்போட்டிக்காக தற்போது வீரர்கள் டெல்லி மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் சுற்றுச்சூழல் காற்று மாசு அதிகமாக இருப்பதால், பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் அளவில் பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து, பிசிசிஐக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த பிசிசிஐ […]

அடித்து துவம்சம் செய்த இளம் தமிழ் சிங்கம்: இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் புதிய நெ.4 வீரர்!

ராஞ்சியில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஏ அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பி அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாடும் பன்சாலும் களமிறங்கினர். உனட்கட் பந்துவீச்சில் 3 ரன்னில் பன்சால் வெளியேற, ஜெய்ஸ்வால் வந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் கவுல் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் தமிழக வீரர் பாபா அபராஜித், கெய்க்வாடுடன் […]

முதல் பகலிரவு போட்டிக்கு இந்திய அணி பயன்படுத்தப்போகும் பந்துகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

இந்தியா – வங்காளதேச அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு 72 இளம் சிவப்பு பந்துகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியில் வழக்கமாக சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் பயன்படுத்துவதற்காக 72 இளம் சிவப்பு பந்துகளை தயாரித்து அனுப்புமாறு கிரிக்கெட் வாரியம் தயாரிப்பு நிறுவனமான […]

டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற கத்துக்குட்டி அணி!

ஆங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஓமன் அணி 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6 நாடுகள் தகுதி பெறும். பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் […]