சென்னை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் திடீர் நீக்கம்.. காரணம் இதுதான்..!

இந்திய கால்பந்து தொடரின் மிக முக்கியமான தொடர், ஐஎஸ்எல் கால்பந்து லீக். இந்த தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி அணி. இந்த அணி, 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி, கடைசி இடத்தையே பெற முடிந்தது. அந்த அணி, இந்த வருடம் நடந்த ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் மற்றும் வெற்றி பெற்று புல்லிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையன் எஃப்.சி. அணி நிர்வாகம் திடீர் நிறுவனம் எடுத்துள்ளது. அணியின் […]

“தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்” வைரலாகும் தோனியின் ஓவிய படம்..!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனியாக விளங்குபவர், தல தோனி. இவர், இதுவரை 90 டெஸ்ட் போட்டி, 350 ஒருநாள் போட்டி மற்றும் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். தற்பொழுது, நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் நிறுவி வருகிறது. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதையும், ஒவ்வொரு துளி நீரும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனியின் ரசிகர் ஒருவர் ஒரு ஓவியத்தை சுவற்றில் […]

ஒரே ஒவரில் ஐந்து விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்த இந்திய வீரர்..!

சையத் முஷ்டக் அலி தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியானது, நேற்று ஹரியானா மற்றும் கர்நாடக அணி இடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹரியானா அணி, தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தது. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, சைதன்யா பிஷ்நோய் 55 ரன்களும் ஹிமான்ஷ ராணா தலா 67 ரன்களும் எடுத்தனர். 195 ரன்கள் […]

#AUSvsPAK முச்சதம் விளாசி அசத்திய டேவிட் வார்னர்.. டிக்ளர் செய்த ஆஸ்திரேலிய அணி..!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. டி-20 போட்டிகள் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி, 21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்-பர்ன்ஸ் […]

விசா முடிந்த பின்னும் சொந்த நாட்டிற்கு செல்லாமலிருந்த பங்களாதேஷ் வீரர்..!

வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரரான சைப் ஹசன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இதில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முடிவடைந்தது. அதனால் வங்கதேச அணியின் ஒரு பகுதியினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், இவருடன் ஒரு சில வீரர்களுக்கு திங்கட்கிழமை விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை வீரர்கள் விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்பொழுது, சைப் ஹாசனின் விசா, முந்தைய […]

பாதி மீசை, பாதி தாடி.. தென்னாபிரிக்க வீரர் காலிஸின் புதிய தோற்றம்..! இதுதான் காரணம்.. பாராட்டும் ரசிகர்கள்..!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அல்-ரௌண்டராக விளங்குபவர், ஜாக் காலிஸ். 44 வயதான அவர், இதுவரை 166 டெஸ்ட் போட்டி, 328 சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் 25 டி-20 போட்டிகளில் விளையாடினார். இவர், புதன்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரை மீசை மற்றும் தாடியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம், சிறிது நேரத்தில் வைரலாகியது. அவர் இதுகுறித்து கூறும்போது, தான் “சேவ் தி ரைனோ” (Save the Rhino) சவாலை ஏற்று இப்படி […]

ஒரே ஓவரில் 5 விக்கெட்: ப்லே சம்பவம் செய்த இந்திய வேப்பந்துவீச்சாளர்!

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா – கர்நாடகா அணிகள் மோதின. அரியானா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எளிதாக 200 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை அபிமன்யு மிதுன் அபாரமாக வீச இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் நான்கு […]

இலங்கை தமிழர் பகுதியின் ஆளுநராக முரளிதரன்: இலங்கைத்தமிழர்கள் அதிர்ச்சி

இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னரும், சர்ச்சைகள் அவரை விட்டு விலகவில்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமாக தினம் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஒரு தமிழராக இருந்து கொண்டு, முரளிதரன் இவ்வாறு கூறலாமா? என அவர் மீது பல்வேறு சாடல்கள் எழுந்தன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் குறித்து, தான் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டதாக […]

இந்தியாவின் நெ.4 இடத்திற்கு தகுதியானவர் இவர்தான்: புதிய குண்டை போட்ட தேர்வுக்குழு தலைவர்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கான சரியான நபர் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நீங்கள் திரும்பி பார்த்தீர்கள் என்றால், 18 மாதங்களுக்கு முன் நாங்கள் விராட் கோலி ஓய்வில் இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர் சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரை தொடர்ச்சியாக அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சிறந்த வீரராக வளர்ந்துள்ளார். ஒருநாள் மற்றும் […]

பயிற்சியே இப்பிடின்னா, போட்டியில் எப்படி ஆடுவாரு? மிடில் ஸ்டம்ப்பை உடைத்தெரிந்த பும்ராஹ்..!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளம் வருபவர், ஜஸ்பிரிட் பும்ராஹ். கடந்த செப்டம்பர் மாதம் இவரின் முதுகில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் அடுத்த அடுத்த போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார். தற்பொழுது காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவர் வேகமாக பந்தை வீசினார். பந்து வந்த வேகத்தில், மிடில் ஸ்டம்ப் உடைந்தது. அது தொடர்பாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் […]