#கொரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்கா வீரர்கள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்த தொடரை முற்றிலுமாக பிசிசிஐ ரத்து செய்தது. இதனைதொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள், தங்களின் தாயகம் திரும்பினர். இந்நிலையில், நாடு திரும்பிய தென்னாபிரிக்கா வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினார்கள். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிலிருந்து […]

“தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை”- சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி. இவர் 2019ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடினார். அதனைதொடர்ந்து, எந்தொரு போட்டிகளிலும் அவர் கலந்துகோள்ளவில்லை. இதனைதொடர்ந்து, தற்பொழுது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அவர் விளையாடவுள்ளார். மேலும், அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் பயிற்சியை நிறுத்தி, வீடு திரும்பினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், தோனி ஐபிஎல் […]

கொரோனா எதிரிரோலி: யூரோ கால்பந்து போட்டிகள் ஒத்திவைப்பு..

கால்பந்து போட்டிகளில் உலககோப்பைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் தொடர், ஐரோப்பா சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்.(EURO) 24 அணிகள் விளையாடும் இந்த தொடர், ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டிகள் ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர் . இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணாமாக பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், யூரோ கால்பந்து தொடர் அடுத்தாண்டு ஜூன் 11ஆம் […]

PSL அரையிறுதி போட்டிகள் ரத்து.. வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது போலவே, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம். தற்பொழுது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், நேற்று லாஹூரில் அரையிறுதி போட்டிகள் நடக்கவிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. இதனையடுத்து, பி.எஸ்.எல் அரையிறுதி போட்டியினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

உலகக்கோப்பை டி -20 போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும்!

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல நாடுகளில் பார்வையாளர்களின்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருசில நாடுகளில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை நடத்த தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை டி-20 போட்டிகள், அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்த போட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும், திட்டமிட்டபடியே இந்த டி-20 தொடர் நடக்கும் என ஐசிசி […]

ரோஹித்தால் மட்டுமே இந்த சாதனையை செய்ய முடியம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் முதல் முதலில் இரட்டை சதம் அடித்தார். ரோஹித் சர்மா இந்த சாதனையை மூன்று முறை ரோஹித் சர்மா எட்டினார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த […]

இன்றைய தினம்: உலகக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய இலங்கை அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி, 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த இறுதிப்போட்டியில் வலுவாக இருந்த ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தங்களின் முதல் உலகக்கோப்பையுடன் கெத்தாக போஸ் கொடுத்தனர். மேலும், இந்த போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா மற்றும் […]

கொரோனா வைரஸ்: உயிரிழந்த பிரபல கால்பந்து பயிற்சியாளர்.. சோகத்தில் வீரர்கள்!

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல நாடுகளில் பார்வையாளர்களின்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருசில நாடுகளில் போட்டிகளை ரத்து செய்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கொ காற்சியா, கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளார். 21 வயதாகும் இவர், ஆட்லெடிகோ போர்ட்டடா அல்டா கிளப்பின் பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக […]

கொரோனா அச்சம்: பிசிசிஐ தலைமையகம் மூடல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிரிக்கெட், கால்பந்து என பல போட்டிகளை தள்ளிவைத்தனர். மேலும், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தனர். இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்ர்து வருவதால், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்படும் என அறிவித்தனர். மேலும், ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் […]

போட்டிக்காக தியாகம் செய்யக்கூடியது மனித உயிர் அல்ல!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிப்படைந்து வந்தனர். இதன்காரணமாக, உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் பிசிசிஐ ரத்து செய்தது. மேலும், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடர், அடுத்தமாதம் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாது, ஐபிஎல் போட்டிக்காக தியாகம் செய்யக்கூடியது மனித […]