விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக  வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் செய்ய, விராட் கோலி பந்து வீசுகிறார். அதன் பின்னர், அனுஷ்கா ஷர்மா பந்து வீச, விராட் கோலி தனக்கான கையுறைகளை அணிந்து கொண்டு பேட்டிங் செய்கிறார். பின்னர் அவர்களுடன் மற்றொருவரும் இணைந்து விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் செய்ய, விராட் கோலி பந்து வீசுகிறார். அதன் பின்னர், அனுஷ்கா ஷர்மா பந்து வீச, விராட் கோலி தனக்கான கையுறைகளை அணிந்து கொண்டு பேட்டிங் செய்கிறார். பின்னர் அவர்களுடன் மற்றொருவரும் இணைந்து விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *