2021ன் ஜூன் மாதத்தில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடத்த திட்டம் !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 645 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிஸ் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளும் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளை […]

ஊக்கமருந்து சர்ச்சை.. பிரபல வீரருக்கு 4 ஆண்டுகள் தடை!

கடந்த 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர் கட்லு ரவிக்குமார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது இவருக்கு நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் ஊக்கமருந்து உட்கொண்டது உடறுதியானதால், தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு இவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இவர் மட்டுமல்லாது, மற்றொரு பளுதூக்கும் வீரரான குர்மெய்ல்சிங் மற்றும் வீராங்கனை பூர்ணிமா பாண்டே இருவருக்கும் […]

சர்வதேச இராணுவ போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கம் ஆனந்தன் குணசேகரன்!

சர்வதேச ராணுவத்திற்கான விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வருகின்றன. 140 நாடுகளில் இருந்து 9,308 ராணுவத்தினர் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அதில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டார். 200 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் வெல்லும் 3 வது தங்கப்பதக்கம் இதுவாகும் தற்போது நடக்கும் ராணுவ விளையாட்டு போட்டியில் 100மீ, மற்றும் 400 மீட்டர் […]

ஏமாற்றி தோற்கடிக்கப்பட்டாரா மேரி கோம்? நடுவர் தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல் மூறையீடு!

உலக குத்துச்சண்டைப் போட்டியில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் மேரி கோம். உலக குத்துச்சண்டைப் போட்டி ரஷ்யாவில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் துருக்கியின் புஸ் நாஸ் காகிரோக்லு-வுடன் மோதினார். புதிய எடைப் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை நோக்கிப் பயணித்த மேரி கோமுக்கு ஏமாற்றமே கிடைத்தது, 1-4 என்ற ரவுண்ட் கணக்கில் தோற்றார் மேரி கோம். இந்த ஆட்டத்தில் இந்தியக் குழுவினரின் அப்பீல் குத்துச்சண்டைப் […]

100மீ ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையை படைத்த டூட்டி சந்த்!

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டூட்டி சந்த் 11.22 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதற்கு முன் டூட்டி சந்த் 11.26 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரது தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், தோகாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 11.48 வினாடிகளில்தான் பந்தய தூரத்தை கடந்தார்.

சொந்த சாதனையை முறியடித்து.. வரலாறு படைத்த தடகள வீராங்கன!!

59 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்ற பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த், இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்றில் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் இதற்கு முன்னர் இவர் படைத்த 11.26 விநாடிகள் என்ற சாதனையை தற்போது முறியடித்து, 11.22 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த […]

100 மீட்டர் தடை ஓட்டம்.. தமிழக வீராங்கனைக்கு தங்கம்!

59 வது தேசிய தடகள போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கனிமொழி 14.05 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் ரயில்வே சார்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற மற்றுமொரு தமிழக வீராங்கனை ஆர் நித்தியா இலக்கை 14.15 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் தட்டிச்சென்றார். போட்டியில் தமிழக வீராங்கனைகள் அசத்தி வருவதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

முழங்கையில் ஆபரேஷன்.. கடைசி நேரத்தில் கைவிடப்பட்ட பிரபல தடகள வீரர்!!

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முழு உடல் தகுதி இல்லாத காரணத்தால் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் இரண்டிலும் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ரா, முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபரேஷன் செய்துகொண்டு ஓராண்டு காலம் ஓய்வில் இருந்தார். தற்போது நடைபெற்று வரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் குணமடைந்து பங்கேற்பார் என […]

தேசிய தடகளம் – தங்கத்தை அள்ளிய அன்னுராணி!

தேசிய தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறார் அன்னு ராணி. 59 ஆவது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட ரயில்வே வீராங்கணை அன்னு ராணி 58.60 மீட்டர்கள் வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எட்டாவது இடம் பிடித்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்

ஊக்கமருந்து சோதனை.. சிக்கிய இந்திய தடகள வீராங்கனை.. 4 ஆண்டுகள் தடை!

ஊக்க மருந்து உட்கொண்டதற்காக இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரனை நான்கு ஆண்டுகள் தடைசெய்துள்ளது உலக தடகள ஊக்கமருந்து தடுப்பு பிரிவு. இந்தியாவின் தடகள வீராங்கனை நிர்மலா, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியின்போது ஊக்கமருந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தடகள ஒருங்கிணைப்பு அமைப்பு, நிர்மலாவின் மீது சோதனை நடத்தியது. இந்த சோதனையில் நிர்மலா ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானதை அடுத்து, இவரை நான்கு ஆண்டுகள் தடை செய்துள்ளது. | இவர் 2017 […]