பேட்மிட்டன்: காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து!

இங்கிலாந்து ஓபன் டென்னிஸ் தொடர், லண்டனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து ஜப்பானை சேர்ந்த நோசோமியை எதிர்த்து விளையாடினார். தொடக்கமுதலே சிறப்பாக ஆடி வந்த சிந்து, 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனைதொடர்ந்து, இரண்டாம் செட் முடிவில் சிந்துவை நோசோமி ஓகுஹுரா பின்னுக்கு தள்ளி 21-15 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியாக, 3ஆம் செட்டை 13-21 என்ற கணக்கில் ஓகுஹுரா வெற்றி […]

பாஜகவில் இணையவுள்ள பிரபல பேட்மிட்டன் வீராங்கனை..!

இந்திய அணியின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனையாக விளங்குபவர், சாய்னா நேவால். ஹரியானாவில் பிறந்த இவர், ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் பேட்மிட்டன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீரர் ஆவர். மேலும், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரியுடன் இவர் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று, அதன் தலைவரான ஜேபி நட்டாவை சந்தித்து கட்சியில் இணைந்தார். இவருடன் இவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துள்ளார்.

ஹைதராபாத் என்கவுன்டரை பாராட்டி பி.வி. சிந்து ட்வீட்..!

ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டியின் உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்திற்கு கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, முகமது ஆரிப் (26), சிந்தகுந்தா சென்னகேசவுலு (20), ஜொலு சிவா (20), ஜொலு நவீன் (20) என்ற நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலை […]

பிரீமியர் பேட்மிண்டன் லீக்கில் சாய்னா நேவால் விலகல்..!

இந்திய பேட்மிண்டனில் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் புதுடெல்லியில் இன்று நடைபெற இருக்கும், பிரீமியர் பேட்மிண்டன் லீக்கின் (பிபிஎல்) 5-வது சீசனில் இருந்து விளக்கியுள்ளார். 29 வயதான சாய்னா நேவால் பிபிஎல் தொடரில் வட கிழக்கு வாரியர்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வேதேச போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ஜனவரி 20-ம் தேதி தொடங்க இருப்பதால் முழு கவனத்தை சர்வதேச போட்டியில் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக […]

பேட்மிண்டன் தொடரில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய வீரர்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங்கைச் சேர்ந்த லீ செயுக் யியுவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் லீ செயுக் யியுவின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க இயலாமல் கிதாம்பி 9-21 என மோசமாக இழந்தார். இரண்டாவது செட்டில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிதாம்பி, முதலில் முன்னிலை பெற்றாலும், பின்னர் செய்த சிறு தவறினால் 23-25 இழந்தார். இந்த தோல்வியின் மூலம் ஸ்ரீகாந்துக்கு தம்பி அரையிறுதி சுற்றோடு […]

ஹாங்காங் ஓபன் – அரையிருதிக்கு முன்னேறி மிரளவைத்த இந்திய வீரர்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி சீன வீரர் சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய ஸ்ரீகாந்த் கிதாம்பி, முதல் செட்டில் முழு ஆதிக்கத்தையும் செலுத்தி 21-13 என வென்று முன்னிலை பெற்றார். இந்நிலையில், 2-வது செட் துவங்குவதற்கு முன் சென் லாங் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால், போட்டியை தொடர முடியாது என அறிவித்தார். முடிவாக, கிதாம்பி வென்றதாக அறிவிக்கப்பட்டதால், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஹாங்காங் ஓபன் – சீன வீரரை வீழ்த்தி கெத்துகாட்டிய இந்திய வீரர்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சீன வீரர் ஹுவாங் யு சியாங்- ஐ எதிர்கொண்டார். பிரனோய் முதல் செட்டின் துவக்கத்தில் ஒரு சில தவறுகளை செய்து, முன்னிலை பெறமுடியாமல் தவித்தார். இறுதி கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு பிரனோய் 21-17 என கைப்பற்றினார். 2-வது செட்டையும் முதல் செட் போலவே 21-17 என கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மீண்டும் ஏமாற்றிய சாய்னா நேவால்.. கடுப்பில் ரசிகர்கள்!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீனாவை சேர்ந்த காய் யான் யானை எதிர்கொண்டார். முதல் செட்டில் சாய்னா நேவாலை பதில் தாக்குதல் செய்ய விடாமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி சீன வீராங்கனை 21-13 என எளிதாக தோற்கடித்தார். பின்னர் இரண்டாவது சுற்றில் சுதாரித்துக்கொண்ட சாய்னா நேவால், இறுதிவரை போராடியும் பலன் இல்லாமல் 20-22 என வீழ்ந்தார். முதல் சுற்றில் தோல்வியடைந்தத சாய்னா நேவால் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் […]

செம்ம ஃபார்மில் ஆடி வரும் பிவி சிந்து.. ஹாங்காங் ஒபனில் என்ன செய்துள்ளார் தெரியுமா?

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அசத்திய சிந்து, ஆதிக்கம் செலுத்தி முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்து நடந்த 2-வது செட்டில் மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சீன ஓபன் பேட்மிண்டன் – காஷ்யாப், பிரனீத் வெளியேற்றம்!

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான விக்டர் ஆக்சல்செனை எதிர்கொண்டார். இதில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய காஷ்யாப், இறுதியில் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் தோல்வியை தழுவி வெளியேறினார். 8வது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை எதிர்கொண்டார். இதில் […]