ஒலிம்பிக் 2020: தகுதி சுற்றுக்கு விகாஸ், கவுரவ் தேர்வு..!

2020ஆம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி, பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியை சேர்ந்த குத்துச் சண்டை வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் அணியின் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரிகோம் தகுதி பெற்று உள்ளார். இதனையடுத்து, ஆண்கள் குத்துசண்டை நடைபெற்று வந்தது. இதில், 69 கிலோ எடை பிரிவில் விகாஸ் கிருஷ்ணனும், 57 கிலோ எடை பிரிவில் கவுரவ் சோலாங்கியும் வெற்றி […]

ஒலிம்பிக் 2020: தகுதி போட்டிக்கு தகுதி பெற்ற மேரி காம்..!

2020ஆம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி, பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியை சேர்ந்த பெண்கள் குத்துச் சண்டை அணி இருந்து யாரை தேர்வு செய்வது என்பதற்கான 2 நாட்களாக டெல்லியில் தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் 51 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவுடன் மோதினார். இந்த போட்டியில், நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி […]

பரிசு மழையில் நனைந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள்… இத்தனை லட்சமா?

ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் முடிவுற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர். குறிப்பாக, மஞ்சு ராணி வெள்ளி பதக்கமும், மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா மூவரும் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்நிலையில், பதக்கம் வென்ற வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவை தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்தனர். பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற […]

என்னுடன் மோதிவிட்டுப்போ!! மேரி கோமை சண்டைக்கு அழைக்கும் இந்திய இளம் வீராங்கனை!

வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் மகளிா் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவுக்காக மேரி கோமுக்கும் தனக்கும் தகுதிச் சுற்று ஆட்டத்தை நடத்த வேண்டும் என நிஹாத் ஸரீன் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா். அவா் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: விளையாட்டின் அடிப்படையே நோ்மையான முறையில் தோ்வு செய்ய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தங்கள் திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. ஒலிம்பிக் தங்கம் வென்றவா்களும், […]

தேசிய குத்துசண்டை.. பதக்கம் வென்ற தமிழக அரசு பள்ளி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

ஹரியானாவில் நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் குத்துச்சண்டை போட்டியில், புதுக்கோட்டை ராணியார் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி பூவிதா, பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். தமிழக விளையாட்டுத்துறை சார்பில் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பள்ளி சார்பில் இவருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய மாணவி பூவிதா கூறுகையில், நான் முதலாம் வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் தான் பயின்று வருகிறேன். இங்கே என்னால் முழுமையாக விளையாட்டு மற்றும் படிப்புகளில் கவனம் […]

முறைகேடான வெளியேற்றம்.. நியாயம் வேண்டும்.. மேரி கோம் பகிரங்க கருத்து!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிரபல இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறி, அரையிறுதி சுற்றில் தோல்வியுற்று வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மேரி கோம் கூறுகையில், ” குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய சந்திப்பில் கலந்து கொண்டேன். அதில் வீரர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் மேலும் சில வெளிப்படையான செயல்பாடுகள் […]

உலக குத்துச்சண்டை – சரித்திரம் படைத்த இந்திய வீராங்கனை!

ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 11 வது சீசனில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 48 கிலோ எடையை பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷ்ய வீராங்கனையை எதிர்கொண்டார். இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை எதிர்பார்த்த அளவிற்கு இறுதிப்போட்டியில் செயல்படவில்லை. ரஷ்ய வீராங்கனையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். 1-4 என  புள்ளிகள் பெற்று வெளியேறினார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் இவருக்கு […]

ஜொலிக்கும் வீராங்கனைகள்.. இந்தியாவிற்கு வெண்கலம்!

11வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது இதில் 54 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஜமுனா போரா அரையிறுதியில் சீன வீராங்கனையான சீன தைபேவை எதிர்கொண்டார். இதில் தைபே 5-0 என வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மஞ்சு ராணி வெண்கலம் வென்றார். 61 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில், இந்திய வீராங்கனை லவ்லினா சீன வீராங்கனை இடம் 5-0 என தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் […]

உலக குத்துச்சண்டை – மேரிகோம் அதிர்ச்சித் தோல்வி!

11வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மேரிகோம் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரையிறுதி சுற்றில் துருக்கி வீராங்கனை புசாசனை எதிர்கொண்டு துவக்கத்தில் சற்று தடுமாறினார். இருப்பினும், தாக்குதல் நடத்தி மீண்டுவர முயற்சிக்கையில் துருக்கி வீராங்கனை பதில் தாக்குதல் நடத்தி மேரிகோமை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் மேரிகோம் இருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மேரி கோம் வெல்லும் 8வது பதக்கம் இதுவாகும்.

குத்துச்சண்டை வரலாற்றில்.. எண்ணிக்கூட பார்க்க முடியாத சாதனையை செய்துள்ள மேரி கோம்!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடை பிரிவில் இதற்கு முன்னர் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறுமுறை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளிப்பதக்கமும் வென்றிருக்கிறார். தற்போது 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வரும் இவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதுவரை பெண்களுக்கான உலக குத்துச்சண்டை வரலாற்றில் […]