கொரோனா பீதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஹாக்கி தொடர்!

மலைசியாவில் அஸ்லான் ஷா என்ற ஹாக்கி தொடர், ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி முடியவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடவுள்ளது. இந்த தொடரில் நடைபெறும் போட்டிகள், கொரோனா வைரஸ் பீதி காரணமாக தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய ஆர்கனைசிங் கமிட்டியின் தலைவரான டத்தோ ஹாஜி அப்த் ரஹீம் கூறியதாவது, தற்பொழுது மலைசியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 11 முதல் 18 ஆம் […]

எப்ஐஹெச் மகளிர் ஹாக்கி பயிற்சியாளர் விருதை 3-வது முறையாக வென்றார் அலிசன் அன்னன்.!

டச்சு மகளிர் தேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிசன் அன்னன் கடந்த 2019-ம் ஆண்டின் எப்ஐஹெச் மகளிர் பயிற்சியாளர் விருதை 3-வது முறையாக பெறுகிறார். இவர் நெதர்லாந்து பெண்களுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இந்த விருதுகளை வென்றுள்ளார். தற்போது, 2019-ம் ஆண்டுக்கான விருதையும் அலிசன் அன்னன் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் அனைவருக்கும் 2019-ம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. ஆனால் இதில் நாங்கள் நிறைய […]

பிரபல ஆக்கி வீராங்கனை சுனிதா லக்ரா ஓய்வு..!!

பிரபல பெண்கள் ஆக்கி அணியின் பெண்கள் வீராங்கனையான சுனிதா லக்ரா, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் தனது கருத்துக்களை தற்பொழுது கூறியுள்ளார். அந்த கருத்தில் இன்றைய தினம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாளாகும். மேலும், நான் சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற நான் முடிவு எடுத்துள்ளேன். 30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தியா முதல்முறையாக பங்கேற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணிக்காக விளையாடியதை […]

ஹாக்கி போட்டியால்.. ஒட்டுமொத்த இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமை!

2023-ம் ஆண்டு ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த இந்தியா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகள் விண்ணப்பம் கொடுத்திருந்தது. 2023-ம் ஆண்டில் இந்தியா தனது 75-வது சுதந்திர தின விழா கொண்டாட இருக்கிறது. அந்த தருணத்தில் தேசிய விளையாட்டான ஹாக்கியை சிறப்பிக்கும் வகையிலும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலும் 2023ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை மீண்டும் வழங்கும்படி இந்திய ஹாக்கி சம்மேளனம் கோரிக்கையிட்டது. இந்நிலையில், நேற்று நடந்த சர்வதேச ஆக்கி […]

ஒலிம்பிக் தங்கம் இந்தியாவுக்கு தான் – ஆடவர் ஹாக்கி பயிற்சியாளர் பேட்டி!

புவனேஸ்வரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் ஹாக்கி குவாலிபயர் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அதிக கோல்கள் அடித்து, 11-3 என்ற கோல் கணக்கில் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல் பெண்களுக்கு நடந்த ஹாக்கி குவாலிபயர் போட்டியில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. இந்திய ஆடவர் ஹாக்கி அணி […]

வந்துட்டோம்னு சொல்லு.. கோப்பையை தூக்க வந்துட்டோம்னு சொல்லு” – ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி!

ஆண்களுக்கான ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபைர் போட்டியும் இந்தியா – ரஷியா இரு அணிகளும் 2வது லெக்கில் பலப்பரீட்சை மேற்கொண்டன. புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரஷ்ய வீரர்களுக்கு ஆட்டம் காட்டினர். ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை துவம்சம் செய்தது. இரண்டு லெக் ஆட்டங்களிலும்  சேர்த்து மொத்த கோல்கள் அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியானது. லீக் ஆட்டத்தில் […]

ஒலிம்பிக் தங்கத்தை தட்டித்தூக்க தகுதி பெற்ற இந்திய ஹாக்கி சிங்கப்பெண்கள்!

புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரின் 2வது லெக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா பலப்பரீட்சை மேற்கொண்டன. அமெரிக்க வீராங்கனைகளின் தாக்குதலை இந்திய அணி சமாளிக்க இயலாமல், துவக்கத்தில் இருந்தே திணறியது. ஆட்டம் முழுவதும் அமெரிக்க வீராங்கனைகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி.. இறுதியில், அமெரிக்க அணி இந்தியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அமெரிக்கா இப்போட்டியில் வென்று இருந்தாலும் மொத்த கோல்கள அடிப்படையில் இந்தியா அதிகமாகவே இருந்தது. இறுதியாக, 6-5 என்ற கணக்கில் […]

அமெரிக்காவை மிரட்டிய இந்திய ஹாக்கி சிங்கப்பெண்கள்!

பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபைர் போட்டி புவனேஸ்வரில் இன்று நடைபெற்றது. இதில் முதல் லெக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா இரு அணிகளும் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் முதல் கால்பகுதி கோல் இல்லாமல் 0-0 என முடிந்தது. 2-வது காலிறுதி நேர ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த, 28-வது நிமிடத்தில் லிலிமா முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை படுத்தினார். 3-வது காலிறுதி நேரத்தில் ஷர்மிளா ஒரு கோலும், குர்ஜித் இரண்டு கோல்களும் அடிக்க […]

ஜஸ்ட் மிஸ்.. சாம்பியன் பட்டம் போச்சே.. இருந்தாலும் இந்த பசங்க ஆடுனது செம்ம!!

21 வயதுக்குட்பட்டோருக்கான 9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கி இறுதிபோட்டி மலேசியாவில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதின. பலம்மிக்க இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, முதலில் கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது. இறுதியில், பலத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக சுல்தான் […]

இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக கிரகாம் ரெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள 54 வயதான கிரகாம், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவரின் பயிற்சியில், உலக லீக் தொடரை வென்றது 2017 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் கிளப்பின் பயிற்சியாளராக பதவி […]