இந்தியா மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர், மகேந்திர சிங் தோனி. இவர் பல நெருக்கமான சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல், பிற வீரர்களிடம் கோபப்படாமல், அதனை நிதாரணமாக கையாளுவார். அதனால் ரசிகர்கள் இவரை “கேப்டன் கூல்” என்று அழைத்துவருகின்றனர்.

இந்நிலையில், தோனியுடனான கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல வீரர்களும் பேசி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், தோனி பொதுவாக கோபப்படமாட்டார் என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இருமுறை பார்த்திருகிறேன்.

2018 IPL retention: Kolkata Knight Riders keep Gautam Gambhir out ...

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடாமல் இருந்தபோது அவர் கோபபட்டிருக்கிறார். மேலும், ஐபிஎல் போட்டியில் பொது வீரர்கள் ஒழுங்காக பில்ட்டிங் செய்யாதபோது அவர் கோபப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அவரின் கோபம் நியாயமானதுதான் என கூறிய அவர், “தோனி கூல்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்களை  ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் கூல்தான்” என கம்பிர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *