கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இர்பான் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் உரையாடிக் கொண்டனர். அப்போது சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங்கை பார்த்தாலே ஆஸ்திரேலியா வீரர்கள் நடுங்குவார்கள் என்றார். ஹர்பஜன் சிங் சுமார் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இவர் மிகச்சிறந்த வீரர் என்றும் ஆஸ்திரேலியா போட்டிகளை வென்று தந்தவர் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் இவரை பார்த்தாலே நடுங்குவார்கள் என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *