கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடுவது என பலவற்றை செய்து நேரத்தை இனிதாக கழித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வாரனர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஏ.ஆர் ரஹ்மானின் “ஒட்டகத்த கட்டிக்கோ” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கிய முதல் படமான “ஜென்டில்மேன்” படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *