Connect with us

Other Games

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்

ஜப்பானில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் சர்வதேச கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

21 சுற்றுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று ஜப்பானில் நடைபெற்றது. 53 லேப்ஸ்களாக 307 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 20 வீரர்கள் பங்கேற்றனர்.

நடப்பு சாம்பியனான மெர்சிடஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிடத்தில் இருந்து வண்டியை இயக்கினார். முடிவில் பந்தய இலக்கை ஒரு மணி நேரம் 27.17 மணித்துளியில் கடந்து நடப்பு சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து 25 புள்ளிகள் பெற்றார்.

மொத்தம் 331 புள்ளிகளுடன் இருக்கும் ஹாமில்டன் பட்டத்திற்கான வாய்ப்பையும் நெருங்கியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See