Connect with us

Athletics

அசத்திய சிங்கக்குட்டி – 20 வயதில் ஈட்டி ஏறிதலில் தங்கம் : இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் நீரஜ் சோப்ரா

பிரான்ஸில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

பிரான்ஸ் நாட்டின் நார்மன்டி மண்டலத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 85.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மால்டோவாவைச் சேர்ந்த அட்ரியன் மார்டேர் 81.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், லிதுவேனியாவின் எடிஸ் மட்டுஸ்விசியஸ் 79.31 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

 தனது 5-வது முயற்சியில் 85.17 மீட்டர் தூரம் எறிந்த போதிலும் ஒரு சுற்றில் கூட பவுல் ஆகாமல் அற்புதமான செயல் திறனை வெளிப்படுத்தினார் நீரஜ் சோப்ரா . எனினும் இது அவரது சிறப்பான செயல்பாடாக அமையவில்லை. ஏனெனில் முன்னதாக அவர், டைமண்ட் லீக் தொடரில் 87.43 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது கூட 86.47 மீட்டர் தூரம் ஈட்டியை செலுத்தியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See