Connect with us

Cricket

அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு: அனுபவ நட்சத்திர வீரர் இல்லை… ரசிகர்கள் கடுப்பு!

வரும் 23-ம் தேதி தொடங்க இருக்கும் தியோதர் டிரோபி போட்டியில் இருந்து மூத்த வீரர் கவுதம் கம்பீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பிசிசிஐ அமைப்பை நெட்சன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

வரும் 23-ம் தேதி இந்தியா ஏ ,பி, சி அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்வு செய்து அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியத் தொடர், உலகக்கோப்பைப் போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இறங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்துவரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கம்பீர் சிறப்பாக விளையாடி ஸ்கோர் செய்தபோதிலும் கூட அவர் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், யுவராஜ் சிங் பெயரும் சேர்க்கப்படவில்லை.

தியோதர் டிராபிக்கான இந்திய ஏ அணி;

தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ப்ரிதீவ் ஷா, அன்மோல்ப்ரீட் சிங், ஈஸ்வரன், அன்கிட் பவ்னே, நிதிஷ் ராணா, கருன் நாயர், க்ரூணல் பாண்டியா, ரவிசந்திர அஸ்வின், தவால் குல்கர்னே, சித்தார்த் கவூல்.

இந்திய பி அணி;

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), மாயன்க் அகர்வால், ரிதுராஜ் கேக்வாட், பி.எஸ் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அன்குஷ் பைன்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ராயூசு, கிருஷ்ணப்பா கவுதம், மாயன்க் மார்கண்டே, நதீம், தீபக் சாஹர், வருன் ஆரோன், ஜெயதேவ் உனாட்கட்.

இந்திய சி அணி;

அஜிக்னியா ரஹானே (கேப்டன்), அபினவ் முகுந்த், சுப்மன் கில், சம்ரத், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ராய், நவ்தீப் சைனி, குர்பானி, உமர் நாசிர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See