Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி!! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அலைஸ்டர் குக்!

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அளவிற்குக் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து 5வது போட்டி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் அலைஸ்டர் குக்.

இங்கிலாந்து அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் 10,000 டெஸ்ட் ரன்கள் அடித்த ஒரே ஒருவர் இவர்தான். தற்போது வரை 12,254 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் ஒருவர் அதிகமாக ஆடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் எண்ணிக்கை இதுவாகும்.

கடந்த ஒன்றரை வருடமாக மோசமான பார்மில் இருந்த அவர் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால், தனது உள்ளூர் அணியான எசெக்ஸ் கவுண்டி அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் எனவும் கூறியுள்ளார். தற்போது 33 வயதான அவர் தற்போது வரை 161 டெஸ்ட் போட்டிகளில் 44.88 சராசரியில் 12,254 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள்

போட்டிகள் – 160
ரன்கள் – 12254
சதம் – 32
அரை சதம் – 56
இரட்டை சதம் – 6
சராசரி – 44.88

ஓருநாள் போட்டிகள்

போட்டிகள் – 92
ரன்கள் – 3204
சதம் – 5
அரை சதம் – 19
சராசரி – 36.41

இவர் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் சரியாக ஆடவில்லை. மேலும், கடந்த ஒரு வருடமாக அவரது சராசரி 18.62 என்ற அளவில் இருக்கிறது. இப்படியாக அவரது ஆட்டத்திறன் குறைந்ததால் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு தனது இடத்தை அழிப்பதற்காகவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ல் இருந்து இங்கிலாந்து அணிக்காக ஆடி வருகிறார்.

இந்த ஓய்வு குறித்து அவர் கூறியதாவது….

எனது வாழ்க்கையில் இந்த நாள் ஒரு சோகமாக நாளாக நாளாக அமைந்தால் சிரிப்புடன் விடை பெற வேண்டுகிறேன். ஏனெனில், இது நடக்கும் என்று எனக்கு தெரியும். மேலும், என்னால் முடிந்த அனைத்தையும் இங்கிலாந்து அணிக்காக கொடுத்துவிட்டேன்.

இனிமேல் கொடுப்பதற்கு ஏதும் இல்லை நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாதித்துள்ளது என்று எண்ணுகிறேன் இங்கிலாந்து அணிக்காக இவ்வளவு வருடங்கள் ஆடுவதே மிகப் பெரிய காரியம். மேலும் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வீரர்களுடன் ஆடியது எனக்கு கௌரவத்தை கொடுத்துள்ளது. மீண்டும் எனது வீரர்களுடன் ட்ரெச்சிங்  ரூமீற்கு வராமல்போவது மட்டுமே எனக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. ஆனால் எனக்கு தெரியும் இதற்கான நேரம் வந்துவிட்டது நான் விடை பெறுகிறேன்.

என்று கூறி உருக்கமாக தனது ஓய்வை அறிவித்தார் குக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See