Connect with us

Kabaddi

அதிர்ச்சி செய்தி: மானத்தை கப்பலேற்றிய கபடி அணி, அரையிறுதியில் படுதோல்வி

இந்தோனேசியாவில் எட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பல அணிகள் பங்கேற்று வந்தாலும், தங்கம் வென்று விடும் என்ற அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒரு அணி என்றால் அது கபடி அணி தான்.

ஏனெனில் இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கபடி தொடர்கள், மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி தொடர்களில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சொல்லப்போனால் ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட தவரவிடவில்லை.

இந்திய அணி கடந்த 7 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி தற்போது ஈரான் அணியிடம் படுமோசமாக தோற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு சென்றுள்ளது. இது இந்திய கபடி ரசிகர்களிடையே பெருத்த அவமானமான போட்டியாக கருதப்படுகிறது.

தற்போது நடைபெற்ற கபடி போட்டியில் ஈரான் அணியுடன் மோதி இந்திய அணி தொடக்க முதலே படுமோசமாக சொதப்பி வந்தது 14-24 என்று முதல் பாதியில் பின்னடைந்த இந்திய அணி, இரண்டாம் பாதியில் 18-27 என தோல்வியை தழுவி வெளியேறியது. மேலும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது.

இந்திய அணி வரலாறு காணாத இந்த தோல்வி இந்திய கபடி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See