Connect with us

Cricket

அதிர்ச்சி செய்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தோனி அதிரடி நீக்கம்?????

மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் பரிசீலிக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்வுக்குழுவினர் தோனியின் சமீபத்திய மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து முக்கியமாக ஆலோசிக்க உள்ளனர். கீப்பிங் பணியை சிறப்பாகச் செய்துவரும் தோனி, அவ்வப்போது தனது அனுபவத்தின் மூலம் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குகிறார். அந்த அடிப்படையில் அணியில் தக்கவைக்கலாமா அல்லது ரிஷாப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்பது ஆலோசிக்கப்படலாம். ஏனென்றால், கடந்த 18 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

அதுவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தர்மசலாவில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி அரைசதம் அடித்தார். அதன்பின் இதுவரை குறிப்பிடும்படியாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை, பேட்டிங் முறையும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இழந்த பேட்டிங் பார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி மீட்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கூட ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆதலால், தோனியை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See