Connect with us

Cricket

‘ அதுக்கு நீ அவுட்டு குடுத்துருக்கனும்’ அம்பையரை அதட்டிய ஆண்டர்சன்: அபராதம் விதிக்க தயாராகிறது ஐசிசி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இங்கிலாந்து அணி 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து ஆடிய இந்திய அணி தற்போது வரை 170 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வழக்கம்போல வேகமாகவும், முரட்டுத்தனமாக ஓடிவந்து பந்து வீசினர். அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்படியாவது விராட் கோலியின் விகெட்டை வேண்டுமென தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினார்.

ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது மேலும் ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பந்தை விராட் கோலியின் பேடில் வீசினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆனால் அந்த பந்து இன்சைட் எட்ஜ் ஆகிவிட்டது. இதற்கு அவுட் கேட்டு கத்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆனால் அதை நாட் அவுட் என்று கூறி விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார் கள நடுவர் குமார தர்மசேனா.

இதற்கு உடனடியாக ரிவ்யு கேட்டது இங்கிலாந்து. அணி பின்னர் மூன்றாவது நடுவர் பார்த்தபோது அங்கு இன்சைட் எட்ஜ் ஆகி இருப்பது தெரிந்தது. ஆனால், இவற்றையெல்லாம் அறியும் முன்னரே ஜேம்ஸ் ஆண்டர்சன் நேராக பெயர் தர்ம சேனாவிடம் சென்று ‘நீ அதுக்கு அவுட்டு கொடுத்திருக்கலாம்’ (“You should have given that out, man”)  என்று கூறியுள்ளார். இதனை கவனித்த கள நடுவர் மற்றும் போட்டியின் நடுவர் ஆகியோர் அம்பையரை எதிர்த்து ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம் விதிக்க தயாராகியுள்ளனர். இதனால் அவருக்கு 30% வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See