Connect with us

Cricket

அது யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க: மேட்ச் பிக்சர் குறித்து ஐசிசி கெஞ்சல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் பற்றிய செய்திகள் பல உலா வந்தன. கத்தாரில் இருக்கும் அல்ஜஸீரா என்ற தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததாக குற்றம் சாட்டியது.

மேலும் அதற்கான ஆதாரம் மற்றும் வீடியோ தங்களிடம் உள்ளதாகவும் கூறியது. இது குறித்து அப்போது ஐசிசி பெரிதாக சட்டை செய்யவில்லை. பிக்சிங் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மட்டும் கூறி அசட்டையாக இருந்தது.

தற்போது அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மேட்ச் பிக்சிங் செய்ய செய்ய வந்த அந்த நபர் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இருக்கும் அந்த நபர் மேட்ச் பிக்சிங் செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக அவர், வீரர்கள பெட்டிங் செய்ய பணம் கொடுத்துள்ளார் என்பது செய்தியாகியுள்ளது.

தற்போது இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள ஐசிசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இவர் யாரென்று கண்டறிந்து சொல்லுங்கள் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் அல் ஜஸீரா நிறுவனத்திடமும் அவர் யாரென்று சொல்லுங்கள் என்று என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See