Connect with us

Cricket

அந்த பயல பாத்து கத்துகோங்க…. இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் அட்வைஸ்

என்னதான் இருந்தாலும் அந்த பயலே மாதிரி நீங்க ஆட முடியாது என இங்கிலாந்து பயிற்சியாளர் பால் பர்ப்ராஸ் இங்கிலாந்து வீரர்களை காட்டமாக கேள்வி கேட்டுள்ளார்.மேலும் விராட் கோலி பார்த்து  கற்றுக்கொள்ளுங்கள் எனவும் தனது வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து அபாரமாக ஆடி இங்கிலாந்து அணியை கிட்டத்தட்ட நிலைகுலைய செய்து விட்டார். முதல் இன்னிங்சில் 50 ரன் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக சதம் அடித்தார். இதன் மூலம் அடுத்தடுத்த பல சாதனைகளை செய்துள்ளார் கேப்டன் கிங் கோலி.

இந்த ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்களும் பல வெளிநாட்டு வீரர்களும் ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கிலாந்து பயிற்சியாளர் பால் பர்ப்ராசே விராட் கோலியை பாராட்டியது தான்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

அவர் மிகச்சிறந்த வீரர் உலகிலேயே மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்த மற்றுக்கறுத்தும் இல்லை. அவருக்கு எதிராக ஆடும்போது மிகவும் நுனுக்கமாகவும், தெளிவாகவும் ஆடவேண்டும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு சில வாய்ப்புகளை கொடுத்தனர் என்று சொல்லலாம், சில கேட்சுகள் விடப்பட்டது என்று கூட கூறலாம். ஆனால் அவர் அதி திறமை வாய்ந்த தரம்வாய்ந்த வீரர்.

எங்களது வீரர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும். அற்புதமாக உள்வாங்கு தெளிவாக ஆடுகிறார். கிட்டத்தட்ட மூன்றாவது மற்றும் நான்காவது ஸ்லிப் வீரர்களுக்கு பந்து செல்லவே இல்லை. அந்த அளவிற்கு தெளிவாக நேராக பேட் வைத்து அடிக்கிறார். கண்டிப்பாக எங்களது வீரர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று விராட் கோலியை எதிரணிக்கு பயிற்சியாளரே பாரட்டி உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See