Connect with us

Cricket

அந்த பையன ஃப்ரீயா விடுங்கப்பா… கோபத்தில் கொதித்த விராட் கேப்டன் விராட்

இளம் வீரர் பிரித்வி ஷா நல்ல கிரிக்கெட் வீரராக வளர வேண்டும், அவரை யாருடனும் ஒப்பிட்டு நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய 18 வயது வீரர் பிரித்வி ஷா முதல் போட்டியிலேயே சதம் அடித்து 134 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் பேட்டிங் ஸ்டைலைப் பார்த்த பலரும் சேவாக் போல் பேட் செய்கிறார் என்று ஒப்பிட்டனர்.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த கம்பீர், சேவாக்குடன் பிரித்வி ஷாவை ஒப்பிடாதீர்கள். இன்னும் பிரித்வி ஷா வளர வேண்டியது இருக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில், இதே கருத்தை கேப்டன் விராட் கோலியும் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நாளை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See