Connect with us

Cricket

அம்பையரை மிரட்டிய ஆன்டர்சன்: அபராதம் விதித்து எச்சரித்த ஐசிசி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலியை விக்கெட் எடுத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி பந்துவீசிய ஆண்டர்சன் கடைசிவரை அவர் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.

ஆனால் ஒரு சமயத்தில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ கேட்டார் ஆண்டர்சன். அது அவுட் இல்லை என தீர்ப்பளித்தார் குமார தர்மசேனா. பின்னர் அம்பையரிடம் ரிவியு சென்றதில் பார்த்தபோது அது அவுட் இல்லை என தெரிய வந்தது.

இதற்காக கள நடுவர் தர்மசேனாவை கடிந்து கொண்ட ஆண்டர்சன், அவரிடம் சென்று ‘அதுக்கு நீ கொடுத்திருக்கணும்’ என்று ஆங்கிலத்தில் கடுமையாக அவரை பார்த்து பேசியுள்ளார். இதனால் கடுப்பான போட்டி நடுவர் ஆண்டிபைக்ராப்ட் ஐசிசியிடம் முறையிட்டார். பின்னர் ஐசிசி கூறியதன் விளைவாக ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டியின் சம்பளத்தில் 15% அபராதமும் இரண்டு டி மெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See