Connect with us

Cricket

அரசியலில் குதிக்கிறார் கம்பிர்!! புதிய கட்சி துவக்கம்?

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் வரும் டெல்லி பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

37 வயதான கவுதம் கம்பிரின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். இதனால் தனது வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வாக அரசியலை பயன்படுத்த உள்ளார் கம்பிர்.

மேலும், டெல்லி இடைதேர்தலில் கவுதம் கம்பிரை பயன்படுத்திகொள்ள பாரதிய ஜனதா கட்சி முடிசெய்துள்ளதாக தெரிகிறது. மேலும், பாரதிய ஜனதா கட்சியில் சரியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் புதிய கட்சி துவங்குவார் கம்பிர் என்வும் செய்திகள் வந்துள்ளது.

இதன் மூலம் அரசியலில் நுழைந்துள்ள 8வது இந்திய கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார் கம்பிர்.

கீர்த்தி ஆசாத், முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து, முகம்மது கைஃப், பிரவீண் குமார், வினோத் காம்ப்ளி மற்றும் மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் முன்னர் அரசியலில் இருந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See