Connect with us

Cricket

அரைசதம் அடித்த முரளி விஜய்; கடுப்பில் இந்திய ரசிகர்கள் !!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் எஸக்ஸ் அணிக்காக விளையாடி வரும் முரளி விஜய் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் முரளி விஜய் கடுமையாக சொதப்பியதால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்து வருவதால் முரளி விஜய்யின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பாமல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவண்டி கிரிக்கெட்டில் எஸக்ஸ் அணிக்காக முரளி விஜய் விளையாடி வருகிறார்.

எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம்ஷைர் அணியும் மோதும் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு கவுண்டி போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் அக்‌ஷர் படேல், 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த முரளி விஜய் கவுண்டி கிரிக்கெட்டில் மட்டும் அரைசதம் அடித்திருப்பது இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See