Connect with us

Cricket

‘அவங்களுக்கு எதிரா மட்டும் ஆடிட்டிங்கன்னா’, நீங்கதான் ராஜா!! – பாகிஸ்தான் வீரர்களை உற்சாகப்படுத்து சோயப் மாலிக்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் நடைபெறும் ஆட்டம் குறித்து தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹீராவாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாரல், ஹீராவாகி விடலாம். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதனால் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வாய்ப்பாகும்.

ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் என்ககு வழக்கமான ஒரு போட்டியை போன்றதுதான். இதுபற்றி அதிக அளவில் யோசித்தால் நெருக்கடி பற்றிக்கொள்ளும்’’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See