Connect with us

Cricket

அவரெல்லாம் வேற லெவலுங்க….. இந்திய பேட்ஸ்மேனை வாய் நிறைய புகழும் இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ்

இந்திய அணியின் பேட்ஸ்மேனை புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர் வேறு யாரும் இல்லை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைத்தான் புகழ்கிறார் அவர்.

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் 540 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் விராட். சொல்லப் போனால் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமிருக்கிறது. இதனால் அவர் 600 ரன்களுக்கு மேல் குவிக்க மிகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேள்ஸ் கூறியதாவது…

சொல்லப்போனால் வேறு ஒரு கிரகத்திலிருந்து ஆடுவது போல் ஆடுகிறார் விராட். நமக்கும் அவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது போலிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார் அவர். பார்க்க மிகவும் எளிதாக இருக்கிறது ஆனால் அது எவ்வளவு கடினம் என்று நமக்கு தெரியும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் ஸ்பெஷலாக ஏதாவது செய்து அற்புதமாக ரன் அடித்திருக்கிறார்.

என வாய் நிறைய புகழ்ந்து பேசியுள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See