Connect with us

Cricket

அஸ்வினை விட இவர் நன்றாக பந்து வீசினார் : சேவாக் காட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற நிலையில் பின்தங்கி தோற்ற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வழக்கம் போல இந்திய அணியின் பேட்டிங் இந்த முறையும் சொதப்பியது. ஆனால் தோல்விக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இங்கிலாந்து அணியை 244 ரன்கள் முன்னிலை பெற வைத்ததே  ஆகும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருபுறம் அற்புதமாக பந்து வீசி நெருக்கடியை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்க.. இந்தியாவின் ஸ்பின்னர்  அஸ்வினால் அவர்களுக்கு ஈடான நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவரது பந்துகளில் எளிதாக ரன் எடுத்து நெருக்கடியை குறைத்தனர் இங்கிலாந்து வீரர்கள்.

சுழற்பந்து வீச்சிற்கு ஆடுகளம் சற்று கைகொடுத்தது. ஆனால் அவரால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியவியலை. மொத்தம் 51 ஓவர்கள் வீசிய அஸ்வின் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

ஆனால் எதிரணியில் இருந்து மொயின் அலி அஸ்வினை அட அற்புதமாக பந்து வீபீஷணார். ஆடுகளத்தின் தன்மையை தனக்கேற்றவாறு சரியாக பயன்படுத்திக்கொண்டு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரே ஆட்டத்த்தின் திருப்புமுனையாக அமைந்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் கூறியதாவது …

சொல்லப்போனால் அவ்வினை விட மொயினலி அற்புதமாக பந்துவீசினார் எனலாம். மேலும், இந்திய பேட்ஸ்மேகளை விட இங்கிலாந்து வீரர்கள் நமது சுழற்பந்து வீச்சுக்களை அற்புதமாக ஆடினர் . மொயின் அலி அஸ்வினை விட  நன்றாக வீசி  இரு அணிகளுக்கும் இடையில் வித்யாசத்தை ஏற்படுத்தினார். இதுவே நம் தோல்விக்கு காரணம்.

என்று கூறினார் விரேந்தர் சேவாக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See