Connect with us

Cricket

அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்: இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் ஜாம்பவான் சக்லைன் முஸ்தாக் புகழாரம் சூட்டியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வீரரான இவர் கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்து வீச்சுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்

ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 8 வருடமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். அவரது முதல் பாதி கிரிக்கெட் வாழ்க்கை இந்தியாவிற்குள் நன்றாக பந்து வீசும் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றார்.

வெளிநாடுகளில் பெரிதாக சோபிக்க தவறி வந்தார் அஸ்வின். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக பந்துவீச்சில் பெரும் பங்களிப்பை கொடுத்து வரும் அவர் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் கூறியதாவது….

அஸ்வின் தற்போது ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக மாறியுள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் பந்துவீச அவர் ஒரு ஜாம்பவான் பந்து வீச்சாளர் போன்று தயாராகியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவரை நான் ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்று கூறினேன். ஆனால் அவரிடம் அப்போது நுணுக்கங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சுகள் இல்லை.

தற்போது அவர் அதனை கற்றுத் தேர்ந்துள்ளார்.
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு பல்வேறு வகையான புதைகுழிகளை வைத்துள்ளார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை பல பந்துகளில் அவுட் ஆக்க அவரால் முடியும்.

அதுதான் ஒரு பந்து வீச்சாளரை சர்வதேச தரம் வாய்ந்த வீரராக மாற்றும் அந்த தகுதியை தற்போது அடைந்துவிட்டார்.

என்று அஸ்வின் குறித்து வாய் நிறைய புகழ்ந்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக். சக்லைன் முஸ்தாக் தற்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See