Connect with us

Cricket

ஆசான் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் : இங்கிலாந்தில் அதிக கேட்ச் பிடித்து அசத்தல்!

இந்திய அணிக்காக கடந்த நான்கு வருடங்களாக ஆடி வருபவர் கேஎல் ராகுல். பெங்களூரை சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்து இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் கண்காணிப்பில் வளர்ந்தவர்.

அவரிடம் யுக்திகளை கற்ற இவர் அந்த யுத்தியை தற்போது அற்புதமாக செயல்படுத்தி வருகிறார். ஆம் ஸ்லிப்பில் நின்று கேட்ச் பிடிப்பதில் மிகப்பெரிய வல்லுனராகத் திகழ்ந்தவர் ராகுல் டிராவிட். அதேபோல் தற்போது கேஎல் ராகுல் வித்தையை காட்டி வருகிறார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தற்போது வரை 13 கேட்ச்களை பிடித்துள்ளார் கேஎல் ராகுல். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஒருவரால் பிடிக்கப்பட்ட அதிக கேட்ச்களின் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ல் 13 கேட்சுகளை பிடித்திருந்தார். தற்போது இந்த தொடரில் 13 கேட்ச் பிடித்து தனது ஆசானின் சாதனையை சமன் செய்துள்ளார் சிஷ்யன் கேஎல் ராகுல்.

ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் பிடித்த அதிக கேட்சுகளின் பட்டியல்:

  1. கே.எல் ராகுல்* – 13 கேட்ச் – 2018, இங்கிலாந்திற்கு எதிராக
  2. ராகுல் டிராவிட் – 13 கேட்ச் – 2004, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
  3. சோல்கர் – 12 கேட்ச் – 1972, இங்கிலாந்திற்கு எதிராக
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See