Connect with us

Cricket

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: ஜாம்வான் வீரர் ரிட்டர்ன்!

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியில் ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கவும் இடம் பெற்றுள்ளார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் லசித் மலிங்காவின் பெயர் நீக்கம் பெற்று இருந்தது.

தற்போது முக்கியமான ஆசிய கோப்பை தொடருக்கு அவரின் அனுபவம் தேவை என்று இலங்கை அணி அவரை அணியில் சேர்த்துள்ளது. இதற்கு முன்னதாக உள்ளூரில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறவில்லை.

தற்போது 35 வயதான அவர் கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுவேன் என அறிவித்து வரும் நிலையில் அவர் தற்போது அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் பால் டேம்பரிங் செய்த விஷயம் தொடர்பாக 6 போட்டிகளில் தடை செய்யப்பட்ட தினேஷ் சண்டிமால் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆசிய கோப்பைத் தொடருக்கான இலங்கை அணி: 

  1. ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்)
  2. குசல் பெரேரா
  3. குசல் மெண்டிஸ்
  4. உபுல் தரங்க
  5. தினேஷ் சந்திமால்
  6. தனுஷ்கா குணதிலக
  7. திசரா பெரேரா
  8. தசுன் ஷானகா
  9. தனஞ்சய டி சில்வா
  10. அகிலா தன்ஜாயா
  11. தில்ருவன் பெரேரா
  12. அமிலா அப்பொன்சோ
  13. கசுன் ராஜீதா
  14. சுரங்கா லக்மால்
  15. துஷ்மந்த சமீரா
  16. லசித் மலிங்கா
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See