Connect with us

Cricket

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு: முன்னனி வீரர்களுக்கு இடமில்லை

இறுதியாக, பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பைக்கு செல்லும் 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மூத்த வீரர் முகமது ஹபீஸ் நீக்கம் பெரிதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இளம் வீரர்கள் சேர்ப்பு, முன்னணி வீரர்கள் நீக்கம் என பலவற்றையும் கொண்டிருக்கிறது இந்த பட்டியல்.

மீண்டும் ஒருமுறை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்டியலாக இது இருக்கிறது. ஆனால், வஹாப் ரியாஸ் க்கும் இம்முறை வாய்ப்பு அளிக்கவில்லை. இவர் உள்ளூர் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துவக்க வீரர்கள் 

கடந்த  சிறப்பாக துவக்கம் அமைத்து தரும் இமாம் உல் ஹக் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் கண்ட பாக்கர் ஸமான் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நடுகள மற்றும் ஆல்ரவுண்டர்கள் 

துவக்க வீரர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு பாபர் அசாம் உள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டராக சோயிப் மாலிக் அணிக்கு பலம்  அதேநேரம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹாரிஸ் சொஹைல் மற்றும் பாஹீன் அஷ்ரப் இருவரும் உள்ளனர்.

ஆச்சர்யம்மூட்டும் விதமாக, மூத்த ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஷான் மசூத் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர்கள் 

பாகிஸ்தான் ஸ்பின் ஜோடியான ஷதாப் கான் மற்றும் முஹம்மத் நவாஸ் இருவரும் ஐக்கிய அரபு நாடுகள் மைதானத்தின் நிலை அறிந்து பந்துவீசுவதால் அவர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள் 

இந்த அணி முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சுக்கு பலம் சேர்பதாகவே உள்ளது. காரணம், ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய  ஆசிப் அலி  இடம் கிடைத்துள்ளது. மேலும், வேகப்பந்து வஹாப் ரியாசுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

  1. சர்பராஸ் அகமது (கேப்டன்),
  2. ஃபகர் ஸமான்
  3. சோயப் மாலிக்
  4. முகமது அமீர்,
  5. ஷதாப் கான்,
  6. இமாம் உல் ஹக்,
  7. ஷான் மசூத்,
  8. பாபர் ஆசாம்,
  9. ஆசிப் அலி,
  10. ஹாரிஸ் சோஹைல்,
  11. முகமது நவாஸ்,
  12. பஹீம் அஷ்ரஃப்,
  13. ஹசன் அலி,
  14. ஜுனடத் கான்,
  15. உஸ்மான் ஷின்வாரி,
  16. ஷாஹீன் அப்ரிடி
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See