Connect with us

Cricket

ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலிக்கு ரெஸ்ட்!!

வரும் 18ம் தேதி துவங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 கொண்ட அந்த அணியில் விராட் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் துபாயில் நடைபெறுகிறது.

விராட் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மாஅணியை வழிநடத்துவார். மேலும் தொடக்க வீரர் ஷிகர் தவான் துணை கேப்டனாக இருப்பா. தொடர்ந்து ஓரம்கட்டப்பட்ட அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அற்புதமாக ஆடிய அவருக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கலீல் அஹமது

அதனைத் தொடர்ந்து கலீல் அஹ்மது என்ற ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்ளாகவும் புவனேஷ்வர் குமார், ஜபிரிட் பும்ரா, ஸ்ரதுல் தகூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வில் இருந்த கேதர் ஜாதவ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி:

  1. ரோஹித் சர்மா (கேப்டன்)
  2. ஷிகர் தவான் (துணை கேப்டன்)
  3. கே.எல் ராகுல்
  4. அம்பத்தி ராயுடு
  5. மணிஷ் பாண்டே
  6. கேதர் ஜாதவ்
  7. தோனி
  8. தினேஷ் கார்த்திக்
  9. ஹர்திக் பாண்டியா
  10. குல்தீப் யாதவ்
  11. யுஸ்வேந்திர சாஹல்
  12. அக்‌ஷர் பட்டேல்
  13. புவனேஷ்வர் குமார்
  14. ஜஸ்ப்ரிட் பும்ராஹ்
  15. ஷர்துல் தாகூர்
  16. கலீல் அஹமத்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See