Connect with us

Cricket

“ஆசிய கோப்பையை டோனி கொடுக்க சொன்னார்” கலீல் நெகிழ்ச்சி..!!

இளம் வீரர்களிடம் கோப்பையைக் கொடுங்கள் ரோஹித் என்று ஆசியக்கோப்பையை என்னிடம் கொடுக்கச் செய்தவர் தோனிதான் என்று இந்திய வீரர் கலீல் அகமது நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.துபாயில் ஆசியக்கோப்பைப் போட்டி நடந்தது. இதில் இறுதிஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது அறிமுகமாகினார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் வென்றவுடன் அனைத்து வீரர்களும் கோப்பையுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.

அப்போது கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவே கோப்பையை வைத்திருந்தார். இதைப் பார்த்த தோனி, ரோஹித்திடம் இளம் வீரர்களிடம் கொடுங்கள் என்ற கூறிய சம்பவத்தை கலீல் அகமது ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலீல் அகமது கூறியதாவது:

”ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை வென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். அப்போது, அனைவரும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தோம். கோப்பையை கேப்டன் ரோஹித் சர்மா வைத்திருந்தார்.

அப்போது ரோஹித் சர்மாவைப் பார்த்த தோனி, ரோஹித் கோப்பையை இளம் வீர்ர்கள் கையில் கொடுங்கள். இந்த அணியில் மிகவும் இளம் வீரர் கலீல் அகமது தான். அவரிடம் கோப்பையைக் கொடுங்கள். அப்போதுதான் இன்னும் உற்சாகமடைந்து சிறப்பாக விளையாடுவார் எனக் கூறி கோப்பையை வாங்கி என் கையில் தோனி கொடுத்தார். அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது.

 

ஹாங்காங் அணிக்கு எதிரானபோட்டியில் நான் நன்றாகப் பந்துவீசினால் கூட, ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்தேன். என் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இதைப் பார்த்த தோனி, என்னிடம் வந்து, நீங்கள் நன்றாகப் பந்து வீசுகிறீர்கள், பந்துவீச்சில் வேகம் இருக்கிறது. ஆனால், சிறிது முன்னுக்கு வந்து வீசுங்கள், எல்லைக்கோட்டுக்குப் பின்னால் வீசும்போது லைன், லென்த் கிடைக்காது என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.

தோனி வழங்கிய ஆலோசனைப்படி நான் அடுத்தடுத்த ஓவர்களை வீசினேன், எனக்கு விக்கெட்டும் கிடைத்தது. ஹாங்காங் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டையும் நான் வீழ்த்தினேன். தோனியின் அறிவுரை எனக்குப் பலவிதத்திலும் உதவியது.இவ்வாறு கலீல் அகமது தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See