Connect with us

Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆறாவது ஆசிய நாடாக புதிய அணி இணைப்பு!!

ஆசை கோப்பைத் தொடர் வரும் 15ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றது.

கடந்த 2 வாரமாக கடைசி அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், மலேசியா, ஏமன், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அந்த ஆறாவது இடம் என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் அமீரகத்தை வென்று ஆசிய கோப்பை தொடரில் நுழைந்தது ஹாங்காங்.

24 ஓவரில் 176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி கடைசி 2 பந்துகளில் 2 ரன் அடித்து திரில்லாக வெற்றி பெற்றது. இதனால் வரும் 16ம் தேதி பாகிஸ்தான் அணியையும் 18ம் தேதி இந்தியாவையும் எதிர்கொள்கிறது ஹாங்காங்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See