Connect with us

Cricket

ஆசிய கோப்பை தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்; இலங்கைக்கு பின்னடைவு !!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. ஒவ்வொரு அணியும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தினேஷ் சண்டிமால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தினேஷ் சண்டிமால் குணமடையை நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் அவர் ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இருந்து வெளியாகி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இவருக்கு பதிலாக நிரோசன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினேஷ் சண்டிமால் விலகியிருப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி;

ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலக, திசரா பெரேரா, தசுன் ஷானகா, தனஞ்சய டி சில்வா, அகிலா தனன்ஜயா, தில்ருவன் பெரேரா, அமிலா அப்பொன்சோ, கசுன் ராஜீதா, சுரங்கா லக்மல்,துஷ்மந்த் சமீரா, லசீத் மலிங்கா.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See