Connect with us

Cricket

ஆசிய கோப்பை தொடரை இந்த அணிதான் வெல்லும்: சவுரவ் கங்குலி சவால்!

14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

இந்த தொடரை இந்திய அணி தான் வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது, “இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம். கேப்டனான கோஹ்லி இந்த தொடரில் இல்லாவிட்டாலும் இந்த ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும். இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் சமாளிக்கும் அளிவிற்கு இந்திய அணி போதிய பலம் பெற்றே உள்ளது” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See