Connect with us

Cricket

ஆசிய கோப்பை முடிந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடாத தோனி.. என்ன செய்கிறார் தெரியுமா?

ஆசியக் கோப்பையில் தனது 200வது கேப்டன்சி போட்டியில் ஆப்கானுடன் டை செய்த பிறகு இறுதிப் போட்டியில் இவரும் தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து மந்தமாக பேட் செய்து அணியின் வெற்றியைத் தடுமாறச் செய்தனர்.

தோனி தன் பேட்டிங்கை பழைய நிலைமைகளுக்குக் கொண்டுவர வேண்டுமெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில், ஜார்கண்ட் அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆட வேண்டியது அவசியம் என சுனில் கவாஸ்கர் சற்றே காட்டமான அறிவுரையை வழங்கினார்.

இந்நிலையில் ஞாயிறன்று பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதித்யா ராய் கபூர், குணால் கேமு, இஷான் கேட்டர், தினோ மொரியா, மற்றும் அமெரிக்கப் பாடகர் நிக் தாமஸ் ஆகியோர் பங்குபெற்ற காட்சிக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டார் தோனி.

இந்தத் தகவலை ரிதி ஸ்போர்ட்ஸ் தன் சமூகவலைத்தளத்தில் தோனி, நிக் தாமஸ் உள்ளிட்டோர் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமிலும் படத்துடன் நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See