Connect with us

Other Games

ஆசிய விளையாட்டில் விட்டதை ஒலிம்பிக்கில் பிடிப்பேன்; சரத் கமல் ஆவேசம்!!

இந்தோனேசியாவில் சமீபத்தில் முடிந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவர் அணி மற்றும் கலப்பு இரட்டையர் அணி இரண்டும் வெண்கல பதக்கத்தை வென்றது.

இந்த இரண்டு பிரிவிலும் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் முக்கிய பங்காற்றியவராக இருந்தார். இந்நிலையில், ஆசிய போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய சரத், சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, நான் ஆசிய போட்டிகளை ஒலிம்பிக் மற்றும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இணையாக தான் பார்க்கிறேன்.

இங்கு பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கம் வெல்ல இன்னும் கடினமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்.

ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் இரண்டிலும் கலந்துகொள்ள இருக்கிறேன். ஆசிய அணிகள் தான் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும், ஆதலால், இது எனக்கு உத்வேகத்தை தான் கொடுக்கும் என தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See