Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுகள் 2018: பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரையிருதிக்கு தகுதிபெற்ற ஹிமாதாஸ்!!

18வது ஆசிய விளையாட்டுகள் இந்தோனேசியாவில் தொடர்ந்து 10வது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் மற்றும்  டூட்டிசந்த் இருவரும் பங்கேற்றனர்.

2வது தகுதி சுற்றில் 23.47 வினாடிகளில் இலக்கை கடந்து, அரையிருதிக்கு தகுதி பெற்றார் 20 வயதுக்கு உட்பட்டோர் சாம்பியன் தொடரில் தங்கம் வென்ற வீரமங்கை ஹிமா தாஸ்.

4வது சுற்றில் கலந்துகொண்ட டூட்டிசந்த் 23.37 இலக்கை கடந்து ஒட்டுமொத்தமாக 2வது இடம்பிடித்து அரையிருதிக்கு எளிதில் தகுதிபெற்றார்.

இதன் மூலம், இன்று மாலை நடைபெற இருக்கும் அரை இறுதி சுற்றுக்கு இந்த இருவரும் இந்திய அணி சார்பில் பங்கேற்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See