Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: செபகக்ட்ராவில் இந்தியா வெண்கலம்

ஆசியப் போட்டியில் செபாக்டக்ரா விளையாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அரையிறுதியில் இந்திய அணி 0-2 என்கிற கணக்கில் நடப்பு சாம்பியன் தாய்லாந்திடம் தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபாக் டக்ரா விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இந்த விளையாட்டு, 1990 முதல் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 1998 முதல் கடந்த 5 போட்டிகளாக தாய்லாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

குரூப் பி பிரிவில் இந்திய அணி துவக்க ஆட்டத்தில் 2-1 என ஈரானை வென்றது. கடந்த 2017 ஆசிய சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See