Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 15 வயது இந்திய வீரர் தட்டிய வெள்ளி!!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 5ஆம் நாளான இன்று ஆண்கள் டபில் ட்ராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப்பத்தம் வென்றார்.

நேற்று நடைபெற்ற 25மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கணை ராஹி சர்னோபட் தங்கம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See