Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மகளிர் பாட்மிண்டன்- சாய்னா, சிந்து நிலை என்ன?

பெரிதும் எதிர்பார்த்த கபடியில் இந்திய அணி தோற்றாலும், பேட்மின்டன் போட்டியில் இந்திய அணி காலிறுதியை அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய ஒற்றையர் நட்சத்திரங்கள் சாய்னா மற்றும் சிந்து ஆகியோர் காலிறுதியை அடைந்துள்ளனர்.

பாட்மிண்டன் நாக் அவுட் சுற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 21-10, 12-21, 23-21 என்ற ஆட்டக் கணக்கில் வியத்நாமின் டிராங் தை வியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து. மூன்றாவது ஆட்டம் கடும் போட்டி நிலவியதாலும், இருவரும் மாறி, மாறி புள்ளிகளை குவித்ததாலும், போட்டி பரபரப்பாக இருந்தது.

மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-7, 21-9 என்ற ஆட்டக்கணக்கில் ஈரானின் சொரயாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஷெட்டி சிறப்பாக ஆடி 21-12, 21-14 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் டேம்-ஓய் சுங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை 21-16, 21-15 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் யியுங்-ஓய் என்ஜியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு நாக் அவுட் சுற்றில் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 25-27, 16-21 என தாய்லாந்தின் புவரன்ருகோ-தேரட்டசனை இணையிடம் தோல்வியடைந்தனர். மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 15-21, 21-23 என்ற கணக்கில் தாய்லாந்து சபீஸ்ஸ்ரீ-டேக்சபோல் இணையிடம் தோல்வியுற்றனர். இதனால கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பங்கு முடிவுக்கு வந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See