Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டிள்: நம்பிக்கை கொடுக்கும் டென்னிஸ் – 3 பதக்கங்கள் உறுதி?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபடி அணி சொதப்பினாலும் அடுத்தடுத்து பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். தற்போது டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒரு பதக்கம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிசில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – திவிஜ் சரண் இணை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் போபண்ணா – சரண் இணை, அரையிறுதியில் ஜப்பானின் ஷிம்பகுரோ – கெய்ட்டோ இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை 4-6 என இழந்த இந்திய இணை, அடுத்த 2 செட்களை 6-3, 10-8 எனக் கைப்பற்றி வெற்றியை வசமாக்கியது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், ரோகன் போபண்ணா – திவிஜ் சரண் இணை குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னிஷ் குணேஸ்வரன், காலிறுதியில் தென் கொரியாவின் குவான் சூன்வூ-வை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது,

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See