Connect with us

Asian Games

ஆசிய விளையாட்டு ஹாக்கி; ஜப்பானை அசால்டாக வீழ்த்தியது இந்தியா !!

ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்தியா ஆண்கள் அணி ஜப்பானை 8-0 என்ற கணக்கில் அசால்டாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தோனேசியாவை 17-0 எனவும், ஹாங் காங்கை 26-0 எனவும் துவம்சம் செய்திருந்தது.

இந்நிலையில் இன்று  உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 8-0 என ஜப்பானை வீழ்த்தியது. இந்தியா அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See