Connect with us

Cricket

ஆசையாக வந்து கோலியை கட்டிப்பிடித்த ரசிகர் மீது வழக்குப்பதிவு: என்ன செய்வார் விராட் கோலி??

ஹைதராபாத்தில் நடந்து வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த ரசிகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதலாவது நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு வளையத்தையும், தடுப்பு வேலியையும் மீறி தாவிக் குதித்த ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

கேப்டன் விராட் கோலி இருக்கும் இடத்தை நோக்கி ஓடிய அந்த ரசிகர் விராட் கோலியை கட்டிப்படித்து, முத்திடமிட முயன்றார். ஆனால், விராட் கோலி அதற்குச் சம்மதிக்காததால், அவருடன் ஆசையாக செல்ஃபி எடுத்தார். ஆனால், அதற்குள் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மைதானத்துக்குள் வந்து அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See