Connect with us

Cricket

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு: கழட்டிவிடப்பட்ட குல்தீப் சேர்ப்பு, மேலும் புதிய முகங்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடம்பிடித்துள்ல அனைவருமே மிக இளம்வயது வீரர்களாவர்.

இந்த அணியை ஸ்ரேயஸ் அயர் கேப்டனாக இருந்து வழிநடத்துவார். மேலும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்திய ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

அதனைத் தொடர்ந்து தொடரில் இந்திய அணியில் ஆடிய இரண்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது அடுத்த மாதத் துவக்கத்தில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி:

  1. ஷிரேயாஸ் அய்யர் (கேப்டன்) (பேட்ஸ்மேன்)
  2. மாயன்க் அகர்வால் (பேட்ஸ்மேன்)
  3. ரவிக்குமார் சமார்ட் (பேட்ஸ்மேன்)
  4. அபிமன்யு ஈஸ்வரன் (பேட்ஸ்மேன்)
  5. அன்கிட் பாவ்னே (பேட்ஸ்மேன்)
  6. சுப்மான் கில் (பேட்ஸ்மேன்)
  7. கோனா ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்)
  8. ஷாபாஸ் நதீம் (சுழற்ப்பந்து வீச்சு)
  9. குல்தீப் யாதவ் (சுழற்ப்பந்து வீச்சு)
  10. கிருஷ்ணப்பா கவுதம் (சுழற்ப்பந்து வீச்சு – பேட்டிங்)
  11. ரஜினிஷ் குர்பானி (வேகப்பந்துவீச்சு)
  12. நவதீப் சைனி  (வேகப்பந்துவீச்சு)
  13. முகம்மது சிராஜ் (வேகப்பந்துவீச்சு)
  14. அன்கிட் ராஜ்பூட் (வேகப்பந்துவீச்சு)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See