Connect with us

Football

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கால்பந்து போட்டி: இந்தியா வெற்றி

நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3–1 என, ஆஸ்திரேலிய கிளப் அணியான ஏ.பி.ஐ.ஏ. லெய்ச்ஹார்ட் டைகர்ஸ் அணியை வென்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கால்பந்து அணி, 3 நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுகிறது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, அங்குள்ள கிளப் அணியான ஏ.பி.ஐ.ஏ. லெய்ச்ஹார்ட் டைகர்ஸ் அணியை சந்தித்தது.

ஏ.பி.ஐ.ஏ. டைகர்ஸ் அணி 27வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதற்கு 35வது நிமிடத்தில் இந்திய வீரர் சஜித் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு 47, 57வது நிமிடத்தில் சுமீத் பாசி, 2 கோடித்து கைகொடுத்தார். இதற்கு ஏ.பி.ஐ.ஏ. டைகர்ஸ் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3–1 என வெற்றி பெற்றது.

வரும் 28ல் சிட்னியில் நடக்கவுள்ள 2வது போட்டியில் இந்திய அணி, சிட்னி எப்.சி., அணியை எதிர்கொள்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See